இந்தியா விமானி அபிநந்தன் நாளை விடுவிப்பு – இம்ரான்கான் அறிவிப்பு

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை திரும்பக் கொண்டு வரும் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் நுழைந்து தாக்குதல் நடத்தி, பயங்கரவாதிகள் முகாமை அழித்தது. இதையடுத்து, நேற்று காலை இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானங்களை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது.

இந்த பதில் தாக்குதலின் போது, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். இதனால் இந்திய-பாகிஸ்தான் எல்லைகளில் பதற்றமான சூழ்நிலை உண்டாகியுள்ளது. 

: பாகிஸ்தான் வசமுள்ள வீரர் அபிநந்தனை இந்தியாவிற்கு திரும்ப கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அவரது உறவினர், கிரமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மத்திய அரசும் இந்த விவகாரம் தொடர்பாக அந்நாட்டு தூதரகத்திடம் வலியுறுத்தியுள்ளது. 

இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை திரும்பக் கொண்டு வரும் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது.

மேலும், “அபிநந்தனை உடனடியாக நாட்டுக்கு திருப்பி அனுப்பவே பாகிஸ்தானிடம் வலியுறுத்தினோம்; மேலும் பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மத்திய அரசு தெரிவித்தது. 

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொலைபேசி வாயிலாக பேச உள்ளதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

Sharing is caring!

shares