பயங்கரவாதத்தை பொறுக்க முடியாது தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை இந்தியா தொடரும் – சுஷ்மா சுவராஜ் உறுதி

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கொஞ்சமும் பொறுத்துக் கொள்ள முடியாது என சீனாவில் நடக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா, இந்தியா, சீனா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் 16வது ஆலோசனை கூட்டம் சீனாவின் உகான் நகரில் நடக்கிறது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சுஷ்மா, சமீபத்தில் மிகக் கொடூரமான பயங்கரவாத தாக்குதலை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம்.

பாக்.,ஐ சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் எங்களின் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆதரவு தரும் நாடுகள் மீது ஐ.நா.,வும் மற்ற நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாங்கள் 40 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்களை இழந்துள்ளோம். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பயங்கரவாதத்தை கொஞ்சமும் பொறுத்துக் கொள்ள கூடாது என்பதை சமீபத்தில் நடந்த கொடூர பயங்கரவாத தாக்குதல் மூலம் அனைத்து நாடுகளும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். அவர்களுக்கு எதிராக அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாக்.,ல் இயங்கி வரும் ஜெய்ஷ் இ முகம்மது மற்றும் பிற பயங்கரவாத அமைப்புக்கள் மீது சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க கேட்டு வருகிறோம். ஆனால் இந்த தாக்குதலை மறுத்து வருவதுடன் ஜெய்ஷ் இ முகம்மது மீதான குற்றச்சாட்டுக்களையும் பாக்., மறுத்து வருகிறது. பயங்கரவாத அமைப்புக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பாக்., தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்தியாவின் மற்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தவும் ஜெய்ஷ் இ முகம்மது திட்டமிட்டுள்ளது. இதனை தடுக்க போதிய நடவடிக்கை எடுப்பதுடன் பொதுமக்கள் உயிரிழப்பதையும் தவிர்க்க உரிய இலக்கு நிர்ணயித்துள்ளோம். எங்களின் இலக்கு எதிரிகள் நாட்டு ராணுவம் இல்லை. பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிரானது மட்டுமே. மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடப்பதை இந்தியா விரும்பவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது என்றார்.

Sharing is caring!

shares