விருப்ப மனுக்கள் பெறுவதற்கு ஆள் இல்லாததால் கட்சியில் இல்லாதவர்களும் விருப்ப மனு தரலாம் கமல்

‘தேர்தலில் போட்டியிட, நல்லவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். கட்சியில் இல்லாதவர்களும், 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி, விருப்ப மனு பெறலாம்’ என, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர், கமல் கூறியுள்ளார்

லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர், நாளை முதல் மார்ச், 7 வரை, சென்னை மற்றும் பொள்ளாச்சியில் உள்ள, கட்சி அலுவலகங்களில், விருப்ப மனு பெறலாம். புதிய தமிழகத்தை உருவாக்க விரும்புவோர், விருப்ப மனு பெறலாம்.

அதேபோல, மாற்றத்தை விரும்புபவர்கள், விருப்ப மனுவில், தகுதியானவரை பரிந்துரைக்கலாம். தமக்கே அத்தகுதிகள் இருப்பதாக நினைப்பவர்கள், மனுவை தரலாம். இதில், மக்கள் நீதி மைய கட்சி உறுப்பினர்கள் அல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.விருப்ப மனு பெற விரும்புபவர்கள், 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.

நேர்காணல், சென்னையில், மார்ச், 7க்கு பின் நடத்தப்படும். சாதனை என்பது சொல் அல்ல; செயல். நாளை, நிகழப்போகும் மாற்றத்தை நமதாக்க, விரைந்து விண்ணப்பிக்கவும்.இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:கூட்டணிக்கு முன்வந்தால், தே.மு.தி.க., வுடன் பேசுவோம். கூட்டணி குறித்து சிலர், எங்களிடம் பேசி வருகின்றனர். அந்த பேச்சு நிறைவடையும் நிலையில், உங்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

எங்களுடன் கருத்து ஒற்றுமை உள்ளவர்களுடன் கூட்டணி வைப்போம். தேவை ஏற்படும்பட்சத்தில், கூட்டணியில்லாமல், தனித்து போட்டியிடவும் தயாராக இருக்கிறோம்.இவ்வாறு, கமல் கூறினார்.
”எல்லையில், பயங்கரவாதிகள் மீது, நம் விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது, பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடி. நம் படையின், வீரத்தை மெச்சுகிறேன்,”- கமல்

Sharing is caring!

shares