‘‘போர் வேண்டாம்’’ பாகிஸ்தானை மன்னித்து விடுங்கள் இந்தியாவுக்கு பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள்

விமானப்படை தாக்குதல் மூலம் பாகிஸ்தானுடன் இந்தியா போரில் இறங்க வேண்டாம் என அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஷாபேஸ் ஷெரிப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன.

‘‘நிறுத்திக் கொள்ளுங்கள்’’- விமானப்படை தாக்குதல் குறித்து சீனா கருத்து
இதில் பாலாகோட், சாக்கோட், முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கி வந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு பெரும் பின்னடைவாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.

விமானப்படை தாக்குதல் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் அரசுக்கு நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது.

விமானப்படை தாக்குதல் குறித்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித் தலைவரும், அந்நாட்டு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஷாபேஸ் ஷெரிப் கூறுகையில், ‘‘இந்திய அரசு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சரியான புரிதல் இன்றி போருக்குச் செல்ல வேண்டாம்.

இதன் மூலம் தெற்காசியாவில் போர் மேகங்கள் சூழ்ந்து பாதிப்பு ஏற்படும். அதேசமயம் எங்களை பலவீனமானவர்கள் என எண்ண வேண்டாம்’’ எனக் கூறினார்.

Sharing is caring!

shares