சென்னைக்கு மார்ச் 6ம் தேதி வருகிறார் பிரதமர் மோடி

லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி மார்ச் 6 ம் தேதி சென்னை வர உள்ளார்.க்

லோக்சபா தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் பா.ஜ., காங்., உள்ளிட்ட முக்கிய கட்சிகள் நாடு முழுவதும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை துவக்குவதற்காக மார்ச் 6 ம் தேதி பிரதமர் மோடி சென்னை வர உள்ளார். அன்று சென்னையில் நடக்கும் பிரம்மாண்ட கூட்டத்திலும் மோடி உரையாற்ற உள்ளார்.

மார்ச் 1 ம் தேதி மோடி கன்னியாகுமரி வர உள்ள நிலையில், மார்ச் 6 ம் தேதி மீண்டும் பிரசாரத்திற்காக தமிழகம் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

shares