இந்திய விமானியை பாகிஸ்தான் கைது செய்துள்ளதா?

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் எப் 16 ரக போர் விமானம் இந்திய விமானப்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. பின்லேடன் விஷயத்தில் அமெரிக்கா எவ்வாறு நடந்து கொண்டதோ அதேபோன்ற நடவடிக்கை எடுக்க இந்தியாவும் தயார் என்று அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் எப் 16 ரக போர் விமானம் இந்திய விமானப்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. தொடர்ந்து எல்லையில் பதட்டம் அதிகரித்து போர் மூளும் சூழல் ஏற்பட்டு இருப்பதால், உலக நாடுகள் இருநாடுகளின் நடவடிக்கைகளையும் உற்று நோக்கி வருகின்றன.

தெற்கு காஷ்மீரில் தேசிய புலனாய்வு ஏஜென்சி 11 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது. இங்குள்ள பிரிவினைவாதிகளின் வீடுகளில் சோதனை நடந்து வருகிறது. கடந்த 14ஆம் தேதி நடந்த புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்த சோதனை நடந்து வருவதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வழியே ஏர் இந்தியா விமானங்கள் பறக்காது என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு.

இந்திய விமானி கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை கவனித்துவருவதாகவும். இந்தியாவை சேர்ந்த மிக்21 ரக விமானத்தை விமானியுடன் காணவில்லை என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தான் இராணுவதளபதி தனது டிவிட்டர் பக்கத்தில் இந்திய விமானங்களை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாகவும் அதில் இருந்து குதித்த இரண்டு விமானிகளை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!

shares