உடல் ஆரோக்கியத்தின் கண்களின் முக்கியத்துவம்

கண்கள் உங்கள் உடலின் ஆரோக்கியத்தினை எளிதாய் வெளிப்படுத்தி விடும். கண்களின் ஆரோக்கியத்தினை அறிந்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.

உங்கள் கண்கள் உங்களுக்கு சொல்வது என்ன? கண்கள் உங்கள் உடலின் ஆரோக்கியத்தினை எளிதாய் வெளிப்படுத்தி விடும்.

  • கண்ணில் இரைப்பையின் முடிகாலில் வரும் கட்டி மிகவும் வலி கொடுக்கும். சில நாட்கள் முதல் சில மாதங்கள் வரை கூட இருக்கக்கூடும். பொதுவில் உடனடி மருத்துவ உதவி பெறுவதே இதற்கு தீர்வாக அமையும். ஆனால் தொடர்ந்து ஒரே இடத்தில் வருவது, நீண்ட கால தொந்தரவு இவைகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக கவனிக்க வேண்டும்.
  • புருவ முடி சிலருக்கு சீக்கிரமாகவே மெலிந்து வரும். வயது, சக்தியின்மை, ஸ்ட்ரெஸ் இவையெல்லாம் ஒரு காரணம் என்றாலும் தலையில் வழுக்கை ஏற்படுவது போல புருவ முடியிலும் ஏற்படலாம். தைராய்டு குறைபாடு காரணமாக இருக்கலாம். உரிய கவனம் கொள்ளுங்கள்.

இன்றைய கால கட்டத்தில் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து காலை முதல் இரவு வரை வேலை செய்வதே வழக்கமாகி விட்டது. கம்ப்யூட்டர் முன்னேற்றம் உலகையே உங்களிடம் அழைத்து வந்துவிடும் என்றாலும் கண்களுக்கு ஏற்படும் அதிக உழைப்பு பற்றி கண்டிப்பாக கண் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

  • கண்கள் சற்று வெளிவந்தது போல் இருந்தாலும் தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம்.
  • கண் வெள்ளை, மஞ்சள் நிறத்தில் இருந்தால் அனைவரும் அறிந்ததே. மஞ்சள்காமாலைக்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
  • சர்க்கரை நோய் பலவித கண் பிரச்சினைகளை கொடுக்கலாம். வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
  • திடீரென கண் பார்வை மங்குதல், சரியான பார்வை இன்மை போன்றவை உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவை.

Sharing is caring!