வடகொரிய உணவுப் பற்றாக்குறை படிப்படியாக அதிகரிப்பு

உணவு பற்றாக்குறையை சமாளிக்க உதவுமாறு, ஐக்கிய நாடுகள் அவையை, வடகொரியா கேட்டுக்கொண்டிருக்கிறது.

இதுதொடர்பாக, ஐக்கிய நாடுகள் அவைக்கு, வடகொரியா அளித்திருக்கும் அறிக்கையில், நெல், கோதுமை, உருளைக்கிழங்கு, சோயபீன்ஸ் ஆகியனவற்றின் உற்பத்தி, இந்தாண்டு, கடுமையான சரிவை சந்தித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை பொழிவு குறைவு உள்ளிட்ட மாறுபட்ட பருவநிலை காரணிகளால், ஒரே ஆண்டில், 14 லட்சம் டன்கள் அளவிற்கு, உணவு உற்பத்தி முற்றாக முடங்கிவிட்டதாகவும் வடகொரியா கூறியுள்ளது.

வடகொரியாவின் இந்த அறிக்கையை சுட்டிக்காட்டியிருக்கும் ஐ.நா அவைக்கான செய்தித்தொடர்பாளர் ஸ்டெபானா ஜூஜாரிக் ((Stephane Dujarric)), ஒரு கோடியே 5 லட்சம் வடகொரிய மக்கள் உணவு பொருள் தேவையை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *