சுற்றுலா பயணிகளுக்கு காட்டுதீ குறித்த விழிப்புண‌ர்வு நோட்டீஸ்

கொடைக்கான‌லில் வ‌ன‌த்துறை சார்பாக‌ வ‌ன‌ப்ப‌குதிக்கு செல்லும் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளுக்கு காட்டுதீ குறித்த விழிப்புண‌ர்வு வாச‌க‌ம் அச்சிட‌ப்ப‌ட்ட‌ நோட்டிஸ் வ‌ழ‌ங்க‌ப‌ட்டு அறிவுரை வ‌ழ‌ங்கின‌ர்

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லில் வெயிலின் தாக்க‌ம்  அதிக‌ரித்து காண‌ப்ப‌டுகிற‌து .  இந்நிலையில் பல்வேறு இடங்களில் காட்டு தீ ஏற்பட்டு வருகிறது.

இதனால் வனவிலங்களும் , வனப்பகுதிகளில் அறியவகை மூலிகை செடிகளும்  மரங்களும் அழிந்து வருகிறது . தொடர்ந்து வனப்பகுதியை காப்பாற்ற வேண்டுமெனவும் வனப்பகுதியில் காட்டு தீ ஏற்படாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு வாசகம் அடங்கிய நோட்டிஸ்வனப்பகுதிக்கு உள்ளே செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு பூம்பாறை  வனச்சரகர் பழனிக்குமார் அவர்களால்  வழங்கப்பட்டது. தொடர்ந்து மோயர் பாயிண்ட் , பில்லர்ராக் , பைன்மரக்காடுகள் உள்ளிட்டசுற்றுலா வனப்பகுதிக்குள் செல்லும் போது புகைபிடிக்க வேண்டாம் எனவும் , வாகனத்தில் மெதுவாக செல்ல வேண்டுமெனவும் அறிவுரை வழங்கப்பட்டது.

Sharing is caring!

shares