கொடைக்கானலில் பங்குனி உத்திரவிழா (வீடியோ இணைப்பு)

பங்குனி உத்திர திருவிழா முன்னிட்டு கொடைக்கானலில் 1008 காவடிகள் சுமந்து முருகனுக்கு படைத்த பக்தர்கள். ஏராளமான பொதுமக்கள் மற்றும்சுற்றுலா பயணிகள் பங்கேற்பு.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில் கொடைக்கானலில் உள்ள குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்கு பக்தர்கள் 1008 காவடிகள் சுமந்து முருகனுக்கு படைத்தனர் மேலும் சிறப்பம்சங்களாக விநாயகர் உள்ளிட்ட சாமி உருவங்களால் வேடமிட்டு நடனமாடி சென்றது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இதில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்