பாலகோட் பகுதிக்கு மீடியாக்கள் செல்வதற்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு

இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து குண்டுகளை வீசியது. அப்போது மூன்று பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.
இதன் உண்மைத்தன்மையை அரிய சர்வதேச மீடியாக்கள் முற்படுகிறது. பாகிஸ்தான் அரசு அவர்களை இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய இடத்திற்கு செல்ல அனுமதி மறுத்து விட்டது.
ராய்டர்ஸ் பத்திரிக்கையாளர்கள் குழு அங்கு செல்வதற்கு மூன்றாவது முறையாக பாகிஸ்தானால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.