பாகிஸ்தான் விமானத்தை அபிநந்தன் வீழ்த்தினார் : விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை சுட்டு வீழ்த்தினார் என்பதை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது. கடந்த மாதம் 27-ம் தேதி இருதரப்பு இடையே வான்பகுதியில் நடந்த மோதலில் மிக்21 ரக விமானத்தில் சென்ற இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் ஏவிய ஆர்-73 ஏவுகணை பாகிஸ்தானின் எப். 16 விமானத்தை தாக்கி வீழ்த்தியதாக இந்திய விமானப்படை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

இதே நேரத்தில் எப்-16 ரக விமானத்தில் இருந்து பாகிஸ்தான் விமானப்படை ஏவிய அம்ராம் ஏவுகணை அபிநந்தன் சென்ற விமானத்தை தாக்கியது என்றும் கூறப்பட்டுள்ளது.

விமானப்படை விமானிகளில் அபிநந்தன் மட்டுமே எதிரி விமானத்தை மிகசரியாக சுட்டு வீழ்த்தியதாகவும், அவரது குறி தவறவில்லை என்றும் விமானப்படை அறிவித்துள்ளது.

Sharing is caring!

shares