“உங்க அப்பா இல்லை. ஆகையால் அவசரமாக ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம்” கார்த்தியை வெறுப்பேற்றிய நடிகை கஸ்தூரி

ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜூலை காற்றில்’. கே.சி.சுந்தரம் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் கார்த்தி இருவரும் கலந்து கொண்டார்கள். இவ்விழாவை கஸ்தூரி தொகுத்து வழங்கினார். இதில் கார்த்தியைப் பேச அழைக்கும் போது, கையில் செல்போனை வைத்துக் கொண்டு “இங்கு வாங்களேன்.. நம்ம ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம்” என்று அழைத்தார்.

அப்போது வந்த கார்த்தியிடம் கையில் செல்போனை வைத்துக் கொண்டு “உங்க அப்பா இல்லை. ஆகையால் அவசரமாக ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறினார். இதற்கு “இது தேவையில்லாத ஒரு விஷயமாக இருக்கிறது” என்று முகத்தை திருப்பிக் கொண்டு மைக்கில் பேசத் தொடங்கினார்.

கடந்த சில நாட்களாக பொது நிகழ்ச்சியில் நடிகர் கார்த்திக்கின் தந்தை நடிகர் சிவகுமார் கலந்து கொள்ளும்போது செல்பி எடுக்கும் இளைஞர்களின் செல்போனை தட்டி விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Sharing is caring!

shares