வாகா எல்லை வழியாக இந்தியா வரும் அபிநந்தனை வரவேற்கிறார் பஞ்சாப் முதல்வர் மற்றும் தேசியக் கொடிகளுடன் திரளும் பொதுமக்கள்

ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்படும் விமானப்படை வீரர் அபிநந்தன் ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வரப்படுகிறார். பின்னர் லாகூரில் இருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்படுகிறார்.

இந்திய எல்லையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வாகா பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கபட்டு உள்ளது. பஞ்சாப் முதல்வர் அமிரீந்தர் சிங் அபிநந்தனை வரவேற்கிறார்.

பின்னர் மூத்த ராணுவ அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு, அவர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்படுவார்.

Sharing is caring!

shares