மோடி மீண்டும் பிரதமர் ஆவர் – எடியூரப்பா

தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலால் பாஜக செல்வாக்கு அதிகரித்துள்ளது மோடி மீண்டும் பிரதமர் ஆவர் – எடியூரப்பா
பாகிஸ்தானில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை ஒழிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை வருகிற மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அழித்துள்ள நிலையில், பாஜகவின் செல்வாக்கு நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி எடுத்துள்ள இந்த நடவடிக்கை வருகிற மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என தெரிவித்த எடியூரப்பா, கர்நாடகாவில் 22 தொகுதிகளுக்கும் மேல் பாஜக வெற்றிபெறும் என கூறியுள்ளார்