ராணுவ நடவடிக்கையை நிறுத்துங்கள் : அமெரிக்கா அறிவுரை

Official portrait of President Donald J. Trump, Friday, October 6, 2017. (Official White House photo by Shealah Craighead)

இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லையில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

அமெரிக்க செய்தி தொடர்பாளர் இந்தியா – பாகிஸ்தானுக்கு அனுப்பி உள்ள தகவலில், இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லையில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும். எல்லையில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதை விடுத்து ராணுவ நடவடிக்கையை தொடர்ந்தால் அது தற்போதுள்ள நிலைமையை மேலும் மோசமாக்கும். அது இரு நாடுகளிடையே பதற்றத்தை அதிகரிக்கவே வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்க செயலாளர் மைக் பாம்பியோவும், ராணுவ நடவடிக்கை தொடராமல் இருக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூம், பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது குரேஷியும் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Sharing is caring!