மத்திய அமைச்சர் ராஜ்நாத், நிர்மலா சீதாராமன் ஆலோசனை

The Minister of State for Commerce & Industry (Independent Charge), Smt. Nirmala Sitharaman calling on the Union Home Minister, Shri Rajnath Singh, in New Delhi on March 30, 2017.

எல்லையில் நிலவும் பதற்றம் தொடர்பாக முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும், உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக உளவுத்துறை அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ஆலோசனை நடத்தினர்.

பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இரு நாட்டு எல்லையில் பதற்றம் நிலவுகிறது. தொடர்ந்து எல்லையில் வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அமைச்சர்கள், முப்படை தளபதிகள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தியிருந்தார்.

உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உளவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக, நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தவும், எல்லையோர மாநிலங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், எல்லையில் நிலவும் பதற்றம் தொடர்பாக, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், ராணுவ தளபதி, விமானப்படை தளபதி, கடற்படை தளபதி மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனிடையே, நிர்மலா சீதாராமன், நாளை காஷ்மீர் சென்று எல்லையில் நிலவும் பதற்றம் தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sharing is caring!