சமூக வலைதளங்களில் அதிகரித்துவரும் சமூகவிரோத கருத்துக்கள் சைபர் கிரைம் உறங்குகிறதா?

இந்தியா ஒரு சுதந்திர ஜனநாயக நாடாகவும், மொழிவாரி மாநிலங்கலால் பிரிக்கப்பட்டு மாநில சுயாட்சி அடிப்படையில் அமைந்துள்ளது. மாநிலங்களில் நிர்வாக ரீதியாக உட்பிரச்சனைகள் வந்தாலும் சுமூகமாகவே பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன.

தேசம் என்று வரும்போது நாம் அனைவரும் இந்தியர்களாகவே வாழ்ந்துவருகிறோம். நம் நாடு உலகிலேயே மிக ஆபத்தான எல்லைகளை கொண்ட நாடாக கருதப்படுகிறது. இந்தியாவில் வாழும் 130 கோடி மக்கள் நிம்மதியாக உரங்க மிகப்பெரிய பாதுகாப்பு பணியை இராணுவம் செய்து வருகிறது. நமது இந்திய இராணுவத்தின் பணி என்பது உலகில் எந்த நாட்டு இராணுவமும் செய்திடாத மிகச்சிறந்த பாதுகாப்பு பணியாகவே பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் சுதந்திரத்திற்குபின் மாநிலங்களில் ஒரு சிலர் பிரிவினைகருத்துகளை பேசி வந்தனர். அப்போது சமூக ஊடகங்கள் இல்லாத காலகட்டம் என்பதால் பெரும்பாலும் யாருக்கும் தெரியாமல் இருந்ததது. தற்போது டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைதளங்கள் பெரும் பங்களிப்பை அளிக்கிறது. இந்த தளங்களை சமூக விரோதிகள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பதிவிடுவது, மதங்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்துவது, தொழில்வளர்ச்சியை பாதிப்படைய செய்வது என்று தொடர்ச்சியான கருத்துகளை பரப்பி வருகின்றனர்.

புல்வாமா தாக்குதல் பற்றி ஊடகங்களில் பிரிவினை கருத்துக்கள்.

காஷ்மீர் புல்வாமாவில் ஜெய்ஷிமுகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் நமது இந்திய சிஆர்பிஎப் வீரர்கள் 42 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த செய்தி ஊடகங்களில் வெளியான போதும், சமூக வலைதளங்களில் செய்தியாக வந்தபோதும் இஸ்லாமியர்கள், திராவிட கழகம், மே17, நாம் தமிழர் கட்சிகளில் உள்ள சிலர் அந்த செய்திக்கு சிரிப்பது போன்ற பட்டனை அழுத்தி இந்த செய்தியை நகைச்சுவையாக சித்திரித்தனர்.

மேலும் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் வீட்டு பெண்களை பற்றியும் தவறான வார்த்தைகளால் பதிவிட்டனர். காஷ்மீர் தனி நாடு என்பது போலவும், இந்தியா ஆக்கிரமித்து அங்குள்ள பெண்கள், குழந்தைகள், இளைஞர்களை துன்புறுத்துவதாகவும் அதனால் இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறி இந்திய இராணுவத்தை தாக்குகிறார்கள் என பகிரங்கமாக பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பிரிவினை கருத்துக்களை வெளிப்படையாக பேசுபவர்களை காவல்துறையும், அரசும் கண்டுகொள்வதில்லை என்பது பரவலான கருத்தாக பாரக்கப்படுகிறது. சில ஊடகங்கள் இந்த கருத்துக்களை சொல்வோரை நியாயப்படுத்தி செய்தியாக வெளியிட்டுவருகிறது. கருத்து சுதந்திரம் என்பது மக்களின் பிரச்சனையை அரசிடம் கேள்வியாக வைக்க வேண்டுமே தவிர. தேசத்தையே இழிபடுத்தி பேசும் அளவிற்கு எல்லை மீறிவிட கூடாது என்பது பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.

நேற்றைய (27.02.2019) தினம் நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் இராணுவ விமானத்தை தாக்க பின்தொடர்ந்ததில் நமது இந்திய விமானம் விபத்துக்குள்ளாகி விமானி பாராசூட் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் தரையிரங்கினார். இந்த செய்தி சமூக கூடகங்களில் வேகமாக பரவியது. அந்த வீரர் தமிழகத்தை சேர்ந்தவர் என்றும் சென்னை, தாம்பரம் விமானப்படைப்பிரிவில் பயிற்சி பெற்றவர் என்ற செய்தியும் வெளியாகியது.

இந்த செய்தி வெளிவந்தவுடன் எதிர்மறை கருத்துக்களுடன் பிரிவினைவாதிகள் வழக்கம்போல பதிவிட தொடங்கினர். சில இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு வாழ்த்துக்கள் சொல்லியும், புகழ்ந்தும் கருத்துக்களை வெளியிட்டனர். பிரதமர் மோடி பற்றியும், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பற்றியும் இழிவான கருத்துக்களை வெளியிட ஆரம்பித்தனர்.

பிரிவினை கருத்துக்களையும், இந்திய இறையாண்மைக்ககு எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் போது அதிகமாக சமூக ஊடகத்தில் பரப்பப்படுகின்றது. ஆனால் சைபர் கிரைம் என்று சொல்ல கூடிய காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளனமாக இருப்பது இந்தியாவை துண்டாட நினைக்கும் சமூக விரோதிகளுக்கு சாதகமாக மாறிவிடுகிறது. மேலும், இது தொடர்பாக நீதிமன்றமும் வழக்குகளில் மெத்தனம் காட்டுவதால் இந்தியா எதிரிநாட்டை காட்டிலும் உள்நாட்டு பிரிவினை தீவிரவாதிகளால் தூண்டாடப்படுமோ என்ற அச்சம் சமானிய இந்துக்களின் மத்தியில் இருக்கவே செய்கிறது.

Sharing is caring!