இந்தியா சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் விமானத்தின் புகைப்படம் வெளியீடு

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த போது, இந்தியாவின் மிக் – 21 போர் விமானத்தால், சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் எப் – 16 விமானத்தின் புகைப்படம் வெளியிடப்பட்டது.

பாக்.,கின் பாலகோட்டில் உள்ள, ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம் மீது, நம் விமானப் படை, நேற்று முன்தினம் (பிப்.,26) அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் முகாம் முழுவதும் அழிக்கப்பட்டதுடன், 350 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து, இந்திய ராணுவத்தை தாக்கும் வகையில், பாக்., விமானப்படையைச் சேர்ந்த, ‘எப் – 16’ ரக போர் விமானம், நேற்று, இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. இது, சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, நம் விமானப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த விமானம் ஆக்கிரமிப்பு காஷமீருக்குள் விழுந்தது.

இந்த படம் இந்தியாவின் மிக் 21 போர் விமானம் என சமூக வலைதளங்களில் பரவின. ஆனால், இதனை மறுத்துள்ள இந்திய விமானப்படை வட்டாரங்கள், அது பாகிஸ்தானின் எப்16 போர் விமானம் எனக்கூறியுள்ளன.

சுட்டு வீழ்த்தப்பட்ட எப் – 16 போர் விமானத்தின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த படத்தில், நொறுங்கி விழுந்த எப் – 16 விமானத்தின் முன்பு, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் உள்ளனர். நொறுங்கி விழுந்த எப்.,16 விமானம் தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், விமான இன்ஜினின் வடிவமைப்பு படமும் வெளியிடப்பட்டுள்ளது.

Sharing is caring!