பாகிஸ்தானுக்கு பாயும் நதி நீரை தடுத்து நிறுத்த பஞ்சாப் அரசு திட்டம் மத்திய பாஜக அரசு நிதி உதவி வழங்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இந்திய- பாகிஸ்தான் எல்லையில் போர் நிலவிவரும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் மகோரா பத்தான் பகுதியிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதி நீரை தடுத்து நிறுத்த பஞ்சாப் அரசு முடிவெடுத்துள்ளது.
இதையடுத்து, இதற்கான கட்டுமான பணிகளுக்கான நிதியாக 500 கோடி ரூபாயை, வழங்கிடுமாறு மத்திய அரசை பஞ்சாப் அரசு வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில் நடந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடனான சந்திப்பில், அம்மாநில ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சரும், நீர்வளத் துறை அமைச்சரும் இதனை வலியுறுத்தினர்.