பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று குண்டு மழை பொழிந்தன இந்திய விமானப்படை விமானங்கள்

காஷ்மீர் புல்வாமாவில் துணை ராணுவப்படையினர் மீதான ஜெய்ஸ் இ முகமது தாக்குதலுக்கு இந்தியா பதிலடி

இந்திய விமானப்படையின் மிராஜ் வகை போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் சுமார் ஆயிரம் கிலோ எடை கொண்ட குண்டுகளை வீசி பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படை தாக்குதல்

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்துள்ளன இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத முகாம்களை குறி வைத்து இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல்

இந்தியாவின் 12 போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல்
பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து விமானப்படை தாக்குதல் நடத்தியது குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துரைக்கப்பட்டது

பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன இந்திய விமானப்படை விமானங்கள் தங்கள் எல்லைக்குள் வந்ததை பாகிஸ்தான் ராணுவமும் உறுதிப்படுத்தியது

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று மோடி கூறி வந்த நிலையில் விமானப்படை தாக்குதல் பாகிஸ்தான் எல்லையில் செயல்படும் தீவிரவாத முகாம்களை குறி வைத்து இந்திய விமானப்படை விமானங்கள் தாக்கியுள்ளன

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாஃபர்பாத்தில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் மீதும் குண்டு வீச்சு

Sharing is caring!