பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது குண்டு மழை பொழிந்த இந்தியா விமான படை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், மிரேஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம், ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை வீசி தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை அழித்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நேரம், இடத்தை இந்திய ராணுவமே முடிவு செய்து கொள்ளலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி இருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் இந்திய விமானப் படையானது, எல்லை தாண்டிச் சென்று தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் 12 மிரேஜ் 2000 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயிரம் கிலோ எடையிலான வெடிகுண்டுகளை வீசி இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தி இருப்பதை பாகிஸ்தான் ராணுவமும் உறுதி செய்துள்ளது. எல்லை தாண்டி வந்து இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. முஸாபராபாத் ((Muzafarabad)) பகுதியில் வான் எல்லையை தாண்டி இந்திய போர் விமானங்கள் வந்ததாக பாகிஸ்தான் ராணுவத்தின் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் (( Asif Ghafoor)) தெரிவித்துள்ளார்.

Sharing is caring!