கொடைக்கானலில் விதிமீறிய கட்டடிங்களுக்கு சீல் வைக்கும் பணி துவக்கம்
உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்திரவின் படி கொடைக்கானலில் அனுமதியற்ற கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் காவல் துறை பாதுகாப்புடன் பணி துவக்கம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உயர்நீதிமன்ற உத்திரவின் படி கொடைக்கானலில் அனுமதியற்ற கட்டிடங்களுக்கு சீல் வைத்து நகராட்சி ஆணையாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்திரவிட்டிருந்தது. அதனடிப்படையில் நேற்று வழக்கு விசாரனைக்கு வந்த போது கோவில்கள் , பொதுகட்டிடங்கள் , அரசு கட்டிடங்கள் , குடியிருப்புகள் உள்ளிட்டவைகளை தவிர்த்து உணவு விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை களுக்கு பாரபட்சம் பார்க்காமல் சீல்வைக்க உத்திரவிட்டிருந்தது.
தொடர்ந்து இன்று காலை சீல் வைக்கும் பணி முதற்கட்டமாக பியர் சோலா பகுதியில் இருந்து துவங்கியது. இதில் நகரின் முக்கிய தங்கும் விடுதிகள் உள்ளிட்ட 258 கட்டிடங்களும் முதற்கட்டமாக அடங்கும். சீல் வைக்கும் பணி நடைபெறுவதால் கூடுதலாக 100க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். சீல் வைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வருகின்றனர் கொடைக்கானல் நகர் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது