இருபதே குண்டுகளில் போதும் நம் கதையை முடிக்க : பாகிஸ்தானுக்கு முஷாரப் எச்சரிக்கை

இந்திய விமானப்படை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், இன்று அதிகாலை நடத்திய அதிரடி தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. தொடர்ச்சியாக தீவிரவாதத்தை ஊக்குவித்துவரும் பாகிஸ்தானுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலுள்ள அனைத்துத் தலைவர்களும் இந்தத் தாக்குதலையும், இந்திய விமானப்படையின் வீரத்தையும் பாராட்டிவருகிறார்கள். பாகிஸ்தான் தரப்பிலோ, இந்தத் தாக்குதல் சம்பவத்தை எப்படி எதிர்கொள்வது, போர் தொடுக்கலாமா என்பது குறித்து பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்படுகின்றன.

இதற்கிடையே, ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர்கள் மாநாட்டில் நேற்று பேசிய பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷராப், அணு ஆயுதப்போருக்கு முஷராப்எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடைப்பட்ட உறவு அபாயகட்டத்தில் இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் இரண்டுமே அணு ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள். இச்சூழலில், இந்தியாவோடு அணு ஆயுதப்போர் நடத்த பாகிஸ்தான் நினைக்கக்கூடாது. இந்தியா மீது ஒரு அணுகுண்டு போட்டாலும், பதிலுக்கு அவர்கள் இருபது அணுகுண்டுகளை பாகிஸ்தான்மீது போட்டு பாகிஸ்தானையே இல்லாமல் செய்துவிடுவார்கள். அந்த வலிமை இந்தியாவிடம் உள்ளது. எனவே, இந்தியாவை வெல்லவேண்டுமென்றால் எடுத்ததுமே மொத்தமாக 50 அணுகுண்டுகளை வீச வேண்டும். அதற்கு நீங்கள் தயாரா?” என்று கேள்வி எழுப்பினார். புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில் இந்தக் கருத்தை இவர் வெளிப்படுத்தியுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் படை வலிமையை பாகிஸ்தான் தலைவர்கள் புரிந்துவைத்திருப்பது தெரிகிறது.

Sharing is caring!