இந்திய விமானப்படையை பாராட்டிய முதல்வர்

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படையை பாராட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் உலகத்தை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை வேரோடு அழிப்பதற்கான நடவடிக்கைகளில் பிரதமர் மோடி பல வெற்றிகளை பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் துணிச்சல் மிக்க செயல்பாட்டின் காரணமாக வெற்றிகரமான விமானப்படை தாக்குதல் நடத்தப்படுள்ளதாக கூறியுள்ள அவர், பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் விடுத்துள்ள பாராட்டுச் செய்தியில் இந்திய விமானப்படை விமானிகளின் தனிச்சிறப்பு வாய்ந்த வீரச் செயல் பெருமை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தும் இந்திய விமானப் படை விமானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் Bravo India என்று கூறியுள்ளதோடு கரவொலி எழுப்பப்படுவது போன்ற வரைபடத்தையும் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தானிற்குள் சென்று இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தி இருப்பது, வரலாற்றில் முக்கியமான தருணம் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியர்கள் பெருமை கொள்ளும் தருணம் இது என்று தெரிவித்தார்.

Sharing is caring!