இந்திய விமானப்படையின் பலத்தை பார்த்ததும் பாகிஸ்தான் விமானப்படை பயந்து திரும்பி ஓடியது இந்திய ராணுவம் தகவல்

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் இன்று காலை அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. பாகிஸ்தான் எல்லையையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவம் 1000 கிலோ அளவிலான குண்டுகளை பொழிந்தது.

ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஹிஜ்புல் முஜாகிதீன் ஆகிய பயங்கரவாதிகள் முகாமை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. அத்துடன் பாகிஸ்தானில் நுழைந்து கைபர் பக்துன்வா பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை குறிவைத்தும் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி அழித்தது.

இந்நிலையில் இந்திய விமானப்படையின் பலத்தை பார்த்ததும் பாகிஸ்தான் விமானப் படை திரும்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ‘மிராஜ் 2000’ ரக போர் விமானங்கள் இந்திய தரப்பில் தாக்குதலில் ஈடுபட்டபோது, பதிலடி கொடுக்கும் முயற்சியில் பாகிஸ்தானின் ‘எஃப்16’ ரக போர் விமானங்கள் இறங்கின.

ஆனால் இந்திய போர் விமானங்களின் எண்ணிக்கையையும், பலத்தையும் பார்த்த பாகிஸ்தான் விமானப் படை, தாக்குதலை சமாளிக்க முடியாமல் பயந்து சென்றதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!