புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் சதி ஆதாரங்களுடன் அம்பலமாகிறது இந்தியா ராணுவம்

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் சதி குறித்த கூடுதல் ஆதாரங்களை கண்டறிந்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை கூறியுள்ளது

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் சதி குறித்த கூடுதல் ஆதாரங்களை கண்டறிந்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை கூறியுள்ளது

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட மாருதி ஈகோ கார், காஷ்மீரில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது என்றும், அதன் உரிமையாளருக்குத் தெரிந்தே அதை ஜெய்ஷ் – இ- முகமது தீவிரவாத அமைப்பினர் பயன்படுத்தி வந்தனர் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள அந்த காரின் உரிமையாளரையும் தேடி வருகின்றனர். ஏற்கெனவே அந்த வாகனத்தை இருமுறை பயங்கரவாதக் குழு பயன்படுத்தியதை, இரு வேறு சாட்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தாக்குதலுக்கு முன் காரின் நிறம் மாற்றி பெயின்ட் அடிக்கப்பட்தையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

புல்வாமா தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட 25 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடி பொருள் எங்கிருந்து கிடைத்தது? கடும் பாதுகாப்பை மீறி எல்லை தாண்டி அதனை கொண்டு வந்தது எப்படி? வெடிகுண்டு செய்ய உதவியது யார்? என்பது உள்ளிட்ட விவரங்களை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் கிடைத்துள்ள தகவல்களை ஒருங்கிணைத்து, பாகிஸ்தானின் சதிக்கான கூடுதல் ஆதாரங்களை ஓரிரு வாரங்களில் வெளியிட தேசிய புலனாய்வு முகமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

Sharing is caring!