புல்வாமா சம்பவம் எதிரொலி.. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜப்பானுக்கு வர அனுமதி மறுப்பு.. ஜப்பான் அரசு திட்டவட்டம்.!

இந்திய அரசு எல்லைப்பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகளை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் பாகிஸ்தான் மீது வர்த்தக, பொருளாதார தடை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஜப்பான், அமேரிக்கா, பிரான்ஸ் உட்பட பல வல்லரசு நாடுகள் இந்தியாவின் நிலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் இந்தியாவின் கோபத்தை மீண்டும் சீண்டும் வகையில் இந்தியா சண்டைக்கு வந்தால் பதிலுக்கு மிகப்பெரிய போர் தொடுப்போம் என்று பாகிஸ்தான் இம்ரான்கான் கூறிவருகிறார்.

இதனால் இரு நாடுகளுக்கிடையேயும் பதட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மொகம்மது குரேஷி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க ஜப்பான் செல்ல திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஜப்பான் அரசு குரேஷியின் வருகையை நிறுத்தி வைத்துள்ளது. “ இந்தியாவினுடனான பதட்டத்தை தணிக்கும் பணியில் முதலில் ஈடுபடுங்கள். பதட்டம் தணிந்ததும் பிறகு ஜப்பான் வரலாம்” என ஜப்பான் திட்டவட்டமாகக் கூறியதை அடுத்து குரேஷி தனது ஜப்பான் பயணத்தை நிறுத்தி வைத்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளன .

Sharing is caring!