தலித்தாக இருந்தால் காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சர் பதவி கிடைக்காது என கர்நாடக காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வர் பரமேஸ்வர கருத்தால் சர்ச்சை

உயர் மட்ட அளவில் காங்கிரஸ் கட்சியில் ஜாதீய பாகுபாடு இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள கர்நாடக காங்கிரஸ் துணை முதலமைச்சர் பரமேஸ்வரா தலித் என்பதால் தமக்கு முதலமைச்சர் பதவி 3 முறை மறுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

ஹுப்ளியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் ஜாதீய பாகுபாடு காரணமாக பி.கே.பசவலிங்கப்பா கே.ஹெச் ரெங்கநாத் ஆகியோரும் முதலமைச்சர் பதவியை தவற விட்டுள்ளனர் என்று கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான மல்லிகார் ஜுன கார்கேவினாலும் முதலமைச்சராக ஆக முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் அரசு கட்சி என அனைத்து மட்டத்திலும் தலித்துகள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள அவர் இடஓதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையிலும் பதவி உயர்வில் அநீதி இழைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பரமேஸ்வரா கர்நாடக மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசில் காங்கிரஸ் கட்சியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!