காஷ்மீர் முதல், கன்னியாகுமரி வரை, சட்ட விரோதமாக குடிபெயர்ந்த அனைவரும், விரைவில் இந்தியவில் இருந்து வெளியேற்றப்படுவர் : அமித் ஷா

PTI8_9_2014_000057B

ஜம்மு – காஷ்மீரில் நடந்த, பா.ஜ., கூட்டத்தில், அக்கட்சி தேசியத் தலைவர் அமித் ஷா பேசிய தாவது:காஷ்மீர் முதல், கன்னி யாகுமரி வரையில், சட்டவிரோதமாக குடிபெயர்ந்தோர்,

நாட்டை விட்டு விரைவில் வெளியேற்றப் படுவர். பயங்கரவாதத்தை மத்திய அரசு, ஒருபோதும் அனுமதிக்காது.

லடாக், ஜம்மு பகுதிகளில், முந்தைய அரசு பாகுபாடு மனப்பான்மையுடன் செயல்பட்டது. மாறாக, இந்த பகுதிகளுக்கு உரிய நிதியை, மக்கள் மேம்பாட்டுக்காக, மத்திய அரசு செலவிட்டு வருகிறது.ஜம்மு – காஷ்மீரில் இதற்குமுன் இருந்த அரசுகள், தங்களின் வளர்ச்சியை மட்டுமே குறிவைத்து செயல்பட்டன.

ஆனால், ஒவ்வொரு ரூபாயும், மக்களுக்காக செலவழிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன்,

மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஜம்மு – காஷ் மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக, எத்தகைய நடவடிக்கைகளையும் மேற் கொள்ள, பாதுகாப்பு படைகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அதிகாரம் அளித்துள்ளார். இவ்வாறு, அவர் பேசினார்.

Sharing is caring!