இராணுவம் வேட்டை காஷ்மீரில் 3 ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய அதிரடி தாக்குதலில் ஜெய்ஸ் இ முகமது தீவிர வாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், குல்காம் பகுதியில் பதுங்கியிருந்த ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டு கொன்றனர்.

மேலும் அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த தாக்குதலில் துணை போலீஸ் கண்காணிப்பாளர் அமன் தாகூர் என்பவரும் மற்றொரு ராணுவ வீரரும் வீர மரணம அடைந்தனர்.

துணை கண்காணிப்பாளர் அமன் தாகூர் கடந்த 2 வருடங்களாக குல்காம் பகுதியில் பணி புரிந்து வந்துள்ளார். இவரது தலைமையிலான படையினர் ஏராளமான தீவிரவாதிகளை வேட்டையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!