இந்தியா பாகிஸ்தான் மீது உடனடியாக போர் தொடுக்க பாபா ராம்தேவ் வலியுறுத்தல்

பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுப்பதே சரியான பதிலடியாக இருக்கும் புல்வாமா தாக்குதலுக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ள அவர், சுமார் 70 ஆண்டுகளாக நடந்துவரும் இந்தியா- பாகிஸ்தான் பிரச்சினையில் இதுவரை ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோரை இந்தியா இழந்துள்ளதாக வருத்தம் தெரிவித்தார்.
மேலும், இவ்விஷயத்தில் இனியும் இந்தியா பொறுமை காக்கமுடியாது எனத் தெரிவித்த அவர், போரின் வாயிலாக பாகிஸ்தானுக்கு பதில் சொல்வதுதான் சரியான தீர்வாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்