அரசியலில் குதிக்க சோனியா மருமகன் வழக்குகளில் இருந்து தப்பிக்க வியூகம் என தகவல்

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவும், அரசியலில் குதிக்க தயாராகி வருகிறார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாங்கி குவித்த சொத்துக்கள் தொடர்பாக, அமலாக்கத் துறை மற்றும், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து உள்ளதால், அதிலிருந்து தப்பிக்க, இந்த முடிவை, அவர் எடுத்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. காங்., மூத்த தலைவர் சோனியாவின் மருமகன் மற்றும், உ.பி., மாநில, கிழக்கு பகுதி, காங்., பொதுச்செயலர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா, 50.இவர் மீது, இந்தியா மற்றும் வெளி நாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்தது தொடர்பாக, பல வழக்குகள் உள்ளன.

இதற்காக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அலுவலகங்களில்,அவ்வப்போதுவிசாரணைக்கு ஆஜராகி வருகிறார்.ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் நில மோசடியில்

ஈடுபட்ட தாகவும், வாத்ராவுக்கு எதிராக, வழக்குகள் நிலுவையில் உள்ள இந்நிலையில், விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதால், பா.ஜ., வுக்கு எதிராக, காங்.,கிற்கு வலிமை சேர்க்க, தன் தங்கை பிரியங்காவை, காங்., தலைவர் ராகுல், சமீபத்தில் கட்சியின் பொதுச் செயலராக்கினார்.இதைத் தொடர்ந்து, உ.பி.,யில் பிரியங்கா, பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், ‘பேஸ்புக்’ சமூக வலைதள பதிவில், ராபர்ட் வாத்ரா கூறியுள்ளதாவது: மக்களுக்கு நல்லது செய்ய, நான் அரசியலில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.ஆனால், நான் அரசியலில் சேர்வதால், மக்களுக்கு அதிக நலன் கிடைப்பதாக இருந்தால், அரசியலில் சேர்வதில் தவறு இல்லை. இருப்பினும், என் அரசியல் பயணத்தை மக்களே முடிவு செய்வர்.

இதற்கு முன், உ.பி., உட்பட, நாட்டின் பல பகுதிகளில், காங்., சார்பாக பிரசாரங்களில் ஈடுபட்டு உள்ளேன்.அப்போதெல்லாம், மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதிக்கும். நான் சந்திக்கும் மக்கள், என் மீது அளவு கடந்த அன்பை பொழிவர்.அந்த அனுபவங்கள் வீணாகி விடக்கூடாது. அவற்றை சிறப்பான

முறையில் பயன்படுத்த வேண்டும்.என் மீதான அரசியல் ரீதியிலான குற்றச் சாட்டுகள் நீங்கிய பின், மக்களுக்குசேவையாற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவேன்.

நாட்டில் உள்ள முக்கியமான பிரச்னைகளில் இருந்து, மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில், என் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இதை, மக்கள் படிப்படியாக புரிந்துள்ளனர்.அதனால், என் மீது மக்கள் அளவு கடந்த மரியாதை வைத்துள்ளனர். என் எதிர் காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என, மக்கள் ஆசிர்வதித்துஉள்ளனர்.இவ்வாறு, அவர் கூறிஉள்ளார்.

தொடர்ச்சியாக, தன் மீது பதிவு செய்யப்படும் வழக்குகளில் இருந்து தப்பும் நோக்கத்திலும், காங்கிரஸ் தலைவரும், தன் மைத்துனருமான, ராகுலின் கரத்தை வலுப்படுத்தவும், ராபர்ட் வாத்ரா, இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசியலில் ஈடுபட உள்ளதாக, ராபர்ட் வாத்ரா கூறியுள்ள நிலையில், அதை, பா.ஜ., கிண்டல் செய்துள்ளது.’டுவிட்டர்’ சமூக வலைதளத்தில், வெளியிட்டுள்ள பதிவில், ‘லோக்சபா தேர்தலுக் காக, காங்கிரசின் பிரதமர் வேட்பாளரை அறி முகம் செய்கிறோம்’ என, குறிப்பிட்டு ள்ளது.

Sharing is caring!