புல்வாமா தாக்குதல் காரணமாக காஷ்மீரில் ஒரே நாள் இரவில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரிவினைவாதிகள் கைது

காஷ்மீர் மாநிலத்தில் ஒரே நாள் இரவில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரிவினைவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காஷ்மீரில் தேர்தலை அச்சுறுத்தல் இன்றி, வெளிப்படைத் தன்மையுடன் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தேர்தலுக்கு எதிரான பிரச்சாரங்கள் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்காக காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ள போலீசார், நேற்று ஒரே நாள் இரவில் நடைபெற்ற சோதனைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரிவினைவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!