காஷ்மீர் பிரிவினைவாதி யாசின்மாலிக் கைது செய்தது இராணுவம்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 35-ஏ வை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு வரும் என தகவல்கள் கூறுகின்றன.
இதன்காரணமாக காஷ்மீரில் பதற்றம் ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான யாசின் மாலிக்கை போலீசார் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.